ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: கிருத்திகை (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

Published On:

| By Aara

Aippasi month Kiruthigai Natchathira Palan 2024

-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

திட்டமிட்டுச் செயல்பட்டால், திறமை வெளிப்படும் காலகட்டம். அலுவலகத்தில் தளராமல் உழைத்தால், உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும். உடனிருப்போர்  விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். அனுபவம் மிக்கவர்கள் வார்த்தைகளை அவசியம் கேளுங்கள்.

வெளியூர் செல்லும் சமயத்தில் கோப்புகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். இல்லத்தில் இனிமை சேரும். வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள்.

வாரிசுகள் வாழ்வில் சுபகாரியத்தடைகள் நீங்கும். தேவையற்ற கடன் பெறவோ தரவோ வேண்டாம். பெற்றோர் வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள்.

ஆடை ஆபரணம், அசையும் அசையா சொத்து சேரும். செய்யும் தொழிலில் பொறுப்பு உணர்வுடன் செயல்படுங்கள். ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் தளர்ச்சி இல்லா உழைப்பு இருந்தால், வளர்ச்சி சீராகும். செல்லும் நாடுகளின் சட்டதிட்டங்களை மதியுங்கள்.

அரசியலில் உள்ளவர்களின் வளர்ச்சி அதிகரிக்கும். மேலிடத்தின் ஆதரவு மகிழ்ச்சி தரும். அரசாங்கப் பணிபுரிவோர் அலட்சியம் தவிர்த்தால் அதீத நன்மைகளைப் பெறுவீர்கள்.

படைப்பாளிகள் முழு முயற்சி இருந்தால், வாய்ப்புகளை தொடர்ச்சியாகப் பெறுவீர்கள். புதிய அறிமுகங்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம்.

மாணவர்கள் சோம்பல் தவிர்ப்பது அவசியம். வாகனப் பழுதை உடனுக்குடன் சீர் செய்யுங்கள். பற்கள், அடிவயிறு, மூட்டு வலி வரலாம். பெருமாள் வழிபாடு பெருமை சேர்க்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பரணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share