ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பரணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

Published On:

| By Aara

Aippasi month Bharani Natchathira Palan 2024

-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

உழைப்பினால் உயர்வுகள் உருவாகக் கூடிய காலகட்டம். அலுவலகத்தில் நேரடி கவனமும் நேரம் தவறாமையும் இருந்தால், உயர்வுகளைப் பெறுவீர்கள். சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உண்டு.  யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் தலையிட வேண்டாம். எதிர்பார்த்த பதவி, ஊதிய உயர்வுகள் உழைப்புக்குப் பரிசாகவே கிட்டும்.

வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. கடன்கள் கட்டுக்குள் இருக்கும். வரவை சேமிக்கப் பழகுங்கள். வாரிசுகள் வாழ்வில் நல்லவை நடக்கும்.

தொழிலில் உங்கள் உழைப்பே லாபத்தை ஈட்டும். பங்குவர்த்தகத்தில் அவசரம் வேண்டாம்.

அரசியலில் இருப்பவர்கள் அடக்கத்தால் அதீத நன்மை பெறலாம். பிறருக்கு ஜவாப், ஜாமீன் தருவதைத் தவிருங்கள்.

அரசுத்துறையில்  உள்ளோர் மறைமுக எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். புறம்பேசுவோரை புறக்கணியுங்கள். மாணவர்கள் மறதியை விரட்ட,  தினம்தினம் படியுங்கள். படைப்பாளிகளுக்கு திறமை பளிச்சிடும். அயல்நாடு செல்வோர். சட்டதிட்டங்களை தவறாமல் கடைபிடியுங்கள்.

பயணத்தில் அவசரம் கூடாது.

அஜீரணம், தூக்கமின்மை,அலர்ஜி, தலைவலி உபாதைகள் வரலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு தழைக்கச் செய்யும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: எனக்கே கூட  இல்லாமல் போகலாம்-  பொன்முடி பேச்சின்  பின்னணி இதுதான்!

‘உங்க கோயிலுக்கு வர்றோம்’- சல்மான் முன்னாள் காதலி பிஷ்னோயிடத்தில் உருக்கம்!

6 மாவட்டங்களில் கனமழை….வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அப்பாவு பேசியது எப்படி அவதூறாகும்?: அதிமுக நிர்வாகிக்கு ஐகோர்ட்டு கேள்வி!

ஹெல்த் டிப்ஸ்: மழை நாட்களில் அதிகரிக்கும் மூட்டுவலி… காரணமும் தீர்வும்!

பாகிஸ்தானில் முதல் நாள்… வெளியுறவுத்துறை அமைச்சர் செய்தது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share