-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
பொறுப்பு உணர்ந்து செயல்பட்டால் உயர்வுகள் வரும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை உயரதிகாரிகளால் உணரப்படும். பொறுப்புகளில் சரியான திட்டமிடல் இருந்தால், இடமாற்றம், பதவி, ஊதிய உயர்வுகள் கைகூடிவரும்.
புதிய பணி தேடுவோர், வீண் ரோஷம் தவிருங்கள். பணி கைகூடி வரும் முன் பகட்டு வேண்டாம்..
இல்லத்தில் குதூகலம் அதிகரிக்கும். குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை உருவாகும். வீடு, வாகனம் புதுப்பிக்க வாய்ப்புகள் வரும். கடன்கள் சுலபமாக அடைபடும். பெற்றோர் பெரியோர் வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். அக்கம் பக்கத்தில் அதிக நெருக்கம் வேண்டாம்.
தொழிலமைப்பில் பெரும் முதலீடுகள் தவிருங்கள்.வர்த்தகக் கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்துங்கள்.
அரசியல் சார்ந்து உள்ளவர்கள் தேவையற்ற வாக்குறுதிகளைத் தவிருங்கள். மேலிடத்தின் கட்டளைகளை கனவிலும் மீறவேண்டாம்.
அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் நிலவும். சக ஊழியர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும். கலை, படைப்புத்துறையினருக்கு முயற்சிகளுக்குப் பலன்கிடைக்கத் தொடங்கும். எதிர்பாலரிடம் அதிக நெருக்கம் வேண்டாம்.
மாணவர்களுக்கு உயர்வுகள் உருவாகத்தொடங்கும். பயணத்தில் உடைமைகள் பத்திரம்.
முதுகு, அடிவயிறு, தோள்பட்டை உபாதைகள் வரலாம். இஷ்ட அம்மன் வழிபாடு, இனிமை சேர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: எனக்கே கூட இல்லாமல் போகலாம்- பொன்முடி பேச்சின் பின்னணி இதுதான்!
‘உங்க கோயிலுக்கு வர்றோம்’- சல்மான் முன்னாள் காதலி பிஷ்னோயிடத்தில் உருக்கம்!
6 மாவட்டங்களில் கனமழை….வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
அப்பாவு பேசியது எப்படி அவதூறாகும்?: அதிமுக நிர்வாகிக்கு ஐகோர்ட்டு கேள்வி!
ஹெல்த் டிப்ஸ்: மழை நாட்களில் அதிகரிக்கும் மூட்டுவலி… காரணமும் தீர்வும்!
பாகிஸ்தானில் முதல் நாள்… வெளியுறவுத்துறை அமைச்சர் செய்தது என்ன?