உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி கொடுத்த உத்தரவாதம்: மனோஜ் பாண்டியன்

Published On:

| By Prakash

“உச்ச நீதிமன்றத்தில் அளித்திருக்கும் உத்தரவாதத்தை மீறி அவர்கள் எதைச் செய்தாலும் அவர்கள்மீது நீதிமன்ற அவமதிப்பு தொடரும்” என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று (செப்டம்பர் 30) விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

அப்போது, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என இருதரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம், பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த தடை விதித்து, வழக்கின் விசாரணையை நவம்பர் மாதம் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்த நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன்,

ADVERTISEMENT

“ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் 4 மாதங்களுக்குள் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவோம் என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தீர்மானம் நிறைவேற்றினர்.

ஆனால், இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்களே நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, அந்தப் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தமாட்டோம் என உச்ச நீதிமன்றத்தில் உத்தரவாதத்தை அளித்துள்ளனர்.

ADVERTISEMENT

நீதிமன்றத்தில் வழங்கப்பட்டிருக்கும் இந்த உத்தரவாதத்தை மீறி அவர்கள் எதைச் செய்தாலும் அவர்கள்மீது நீதிமன்ற அவமதிப்பு தொடரும். நீதிமன்றம் தடையாணை பிறப்பித்துவிடும் என்பதாலேயே அவர்கள் அப்படி ஒரு உத்தரவாதத்தை அளித்தனர்” என்றார்.

ஜெ.பிரகாஷ்

டிஜிட்டல் திண்ணை: பிஎஃப்ஐ தடை- ஸ்டாலினைச் சுற்றிய சர்ச்சை! நடந்தது என்ன?  

சவுக்கு சங்கர் உண்ணாவிரதம்: சிறையில் என்ன நடக்கிறது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share