சட்டப்பேரவை தொடங்கியதும் அதிமுக வெளிநடப்பு!

Published On:

| By Kavi

2026ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய சற்று நேரத்தில், ஆளுநரைத் தொடர்ந்து அதிமுகவும் வெளிநடப்பு செய்தது.

ஆளுநர் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து  ஆளுநர் உரை பேசியதாகக் கருதி மசோதாவை நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். அந்த மசோதா ஏற்கப்பட்டது.

ADVERTISEMENT

அப்போது அதிமுகவினர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாகச் சொல்லி கோஷம் எழுப்பினர். அவர்களை அமைதியாக இருக்கும்படி சபாநாயகர் அப்பாவு கேட்டுக்கொண்டார்.

எனினும் அதிமுகவினர் தொடர்ந்து கோஷம் எழுப்பிக்கொண்டே வெளியேறினர்.

ADVERTISEMENT

“கெட்டு போச்சு கெட்டு போச்சு …சட்டம் ஒழுங்கு கெட்டு போச்சு , பாதுகாப்பு இல்லை பாதுகாப்பு இல்லை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. ” என்று கோஷம் எழுப்பிக் கொண்டே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து பேச அனுமதிக்கவில்லை என்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்த நிலையில், அவர்களைத் தொடர்ந்து பாஜக, பாமக எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தனர்.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share