அதிமுகவின் பொருளாளராகத் திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்வதாகக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கிய நிலையில், சென்னை உயர் நீதிமன்றமும் பொதுக்குழுவை நடத்த இன்று (ஜூலை 11) அனுமதி வழங்கியது.
இதையடுத்து நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர் செல்வத்தைக் கட்சியிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஓபிஎஸ் வகித்த பொருளாளர் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய பொருளாளராகத் திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்