தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வாக்காளர்களுக்குப் பணம் அளிப்பதற்காக அதிமுக அனைத்துத் தொகுதிகளிலும் பணம் பதுக்கியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெறும் தேர்தலில் போட்டியிட திமுக தலைமையில் உருவாகியிருக்கும் கூட்டணியில் தமாகா இணைய வாய்ப்பில்லை. இதுகுறித்து, திமுக தலைவர் கருணாநிதி ஏற்கனவே உறுதி அளித்துள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்படும். காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், திமுக தலைவர் கருணாநிதியுடன் மீண்டும் ஒருமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதன்பிறகு, ஓரிரு நாட்களில் தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.”