ADVERTISEMENT

அதிமுக அலுவலக சாவி வழக்கு: பன்னீர் வைத்த அவசர கோரிக்கை!

Published On:

| By Kavi

அதிமுக அலுவலகம் தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் பன்னீர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக அலுவலகம் முன்பு நடந்த வன்முறையைத் தொடர்ந்து வருவாய் துறையினர் அலுவலகத்துக்குச் சீல் வைத்தனர்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிமுக அலுவலக சாவியை வழங்க உத்தரவிட்டது.

அதோடு ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு முன்னதாக தொண்டர்கள், நிர்வாகிகள் யாரும் அலுவலகத்துக்குள் செல்லக் கூடாது என்று கூறியிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் பன்னீர் செல்வம். தற்போது இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டுள்ளார் .

அவரது தரப்பில் வழக்கறிஞர் சேகர் நாப்டே, தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்பு, ஆகஸ்ட் 19ஆம் தேதிக்குள் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முறையிட்டார்.

ADVERTISEMENT

இதனை விசாரித்த தலைமை நீதிபதி, வழக்கை ஆகஸ்ட் 19க்கு முன்பாக பட்டியலிட முயற்சிப்பதாக ஓபிஎஸ் தரப்பிடம் தெரிவித்தார்.

பிரியா

அதிமுகவை ஸ்டாலினால் அழிக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share