சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 17) நடைபெற்று வருகிறது. AIADMK move resolution appavu
“சட்டமன்றத்தில் பேச சபாநாயகர் அப்பாவு அதிக நேரம் அனுமதி வழங்குவதில்லை. அதிமுகவினர் பேசுவதை நேரலையாக ஒளிபரப்புவதில்லை. பாரபட்சமாக நடந்து கொள்கிறார்” என சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை சட்டப்பேரவை செயலர் சீனிவாசனிடம் எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடந்த ஜனவரி மாதம் வழங்கினார்.
இந்தநிலையில், பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற இருந்த நிலையில், கேள்வி நேரம் முடிந்ததும் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். இதனையடுத்து சபாநாயகர் அப்பாவு தனது இருக்கையில் இருந்து எழுந்தார். துணை சபாநாயகர் பிச்சாண்டி அவையை நடத்தி வருகிறார். நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. AIADMK move resolution appavu