சட்டப்பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் இன்று (மார்ச் 28) ஒரு நாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். Aiadmk mlas suspended assembly
சட்டமன்றத்தில் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு துறையின் அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பதிலுரை வழங்குகிறார்.
கேள்வி நேரம் முடிந்ததும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியை சேர்ந்த காவலர் முத்துக்குமார் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நேரமில்லா நேரத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார்.
இதனை தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “நேரமில்லா நேரத்தில் எதுகுறித்து விவாதித்தாலும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக தகவல் தரவேண்டும் என்பது மரபு. நீங்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். நான் டிவியை பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று சொல்லமாட்டேன்” என தெரிவித்தார்.
இதனால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, “எதிர்க்கட்சி தலைவரின் நடவடிக்கைகள் நாகரிகமாக இல்லை. அதனால் இன்று நாள் முழுவதும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடுகிறேன்” என்றார். Aiadmk mlas suspended assembly