ADVERTISEMENT

‘ஊர்ந்து, தவழ்ந்து’… அதிமுக அமளி… சூடான ஸ்டாலின்

Published On:

| By Selvam

Aiadmk mlas sloganeering against stalin

கடைசி நாளான இன்று (ஏப்ரல் 29) சட்டமன்றத்தில் காவல்துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்றது. Aiadmk mlas sloganeering against stalin

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “கடந்த அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டால் தமிழ்நாடு கட்டாந்தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. தமிழகத்தில் மீண்டும் 2026-ஆம் ஆண்டு திராவிட மாடல் 2.0 வரும்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

முதல்வர் பேசிய பின்னர் அதிமுக உறுப்பினர்கள் பேச அனுமதி அளிக்க வேண்டி சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார், “பார்ட் 2 என்பது தமிழகத்தில் ஃபெயிலியர் மாடல். இந்தியன் பார்ட் 2 படம் கூட ஓடவில்லை. அதிமுக ஆட்சி ஊர்ந்து சென்றது என்று முதல்வர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து கோபத்துடன் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஊர்ந்து என்பதற்கு பதிலாக, தவழ்ந்து என்று போட்டுக்கொள்ளுங்கள். ஊர்ந்தோ, தவழ்ந்தோ அந்த வார்த்தை யாரையாவது குறிக்கிறது என்றால் திரும்ப பெற்றுக்கொள்கிறோம். நான் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை, யதார்த்தமாக தான் பேசினேன்.

அது என்ன அன்பார்லிமென்ட் வார்த்தையா? குழந்தை தவழ்ந்து வருவதில்லையா? உங்களுக்கு ஏதாவது மனதில் உறுத்தி, யாரையாவது குறிக்கிறது என்று சொன்னால், அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கலாம்” என்று தெரிவித்தார். Aiadmk mlas sloganeering against stalin

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share