தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மூன்றாவது நாளாக இன்று (ஜனவரி 8) நடைபெற்று வருகிறது.
இன்றைய கூட்டத்துக்கு, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், யார் அந்த சார் என்று கேள்வி எழுப்பியும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை தந்தனர்.
டங்ஸ்டன் தடுப்போம்… மேலூர் காப்போம் என்ற வாசகம் அச்சிடப்பட்ட மாஸ்க்கையும் அணிந்துள்ளனர்.
இந்தநிலையில் கேள்வி பதில் நேரம் நடைபெற்ற போது, உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, ரகுபதி, மூர்த்தி செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் பதில் அளித்தனர்.
இதில் அதிமுக உறுப்பினர்கள் ஆர்.பி.உதயக்குமார், ஜெயராம் உள்ளிட்டோரும் கேள்வி எழுப்பிய நிலையில் அவர்களை நேரலையில் காட்டவில்லை.
அமைச்சர்கள் பேசுவதும், கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்புவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், அதிமுகவினர் கேள்வி எழுப்புவது ஒளிபரப்பு செய்யப்படவில்லை. அவர்கள் பேசும் குரல் மட்டும் ஒலிபரப்பு செய்யப்பட்டது.
வழக்கமாக கேள்வி நேரம் முழுமையாக நேரலை செய்யப்படும் நிலையில், அதிமுக உறுப்பினர்களின் காட்சிகள் மட்டும் காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.
ஏற்கனவே சட்டப்பேரவையில் “நான் பேசுவதை ஒளிபரப்பு செய்வதில்லை” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
எடப்பாடிக்கு செக்? உறவினர் வீட்டில் தொடரும் ஐடி ரெய்டு!
3 மாசத்துக்குள்ள…- மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி முக்கிய அறிவிப்பு!