தமிழக பட்ஜெட் இன்று (மார்ச் 14) தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், அதிமுக எம்எல்ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். Aiadmk mlas boycott assembly
2025-26-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்து வருகிறார்.
முன்னதாக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர் அறையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை நேற்று (மார்ச் 14) வெளியிட்ட அறிக்கை குறித்து சட்டமன்றத்தில் குரல் எழுப்ப முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து சட்டமன்றம் காலை 9.30 மணிக்கு தொடங்கியதும் எடப்பாடி பழனிசாமி எழுந்து டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்துள்ளது அது குறித்து விவாதிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அவரது பேச்சு அவைக்குறிப்பில் ஏறாது என்று சபாநாயகர் கூறினார்.
இதனால் அவையில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளிக்கு இடையிலும் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை வாசித்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். Aiadmk mlas boycott assembly
