சட்டமன்றத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானியக்கோரிக்கை இன்று (ஏப்ரல் 4) நடைபெற உள்ள நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு பேட்ச் அணிந்து வர உள்ளனர். aiadmk mla wear black badge
தமிழக சட்டமன்றத்தில் ஒவ்வொரு துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று நீதி நிர்வாகம், சட்டத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், பெண்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லை என்று குற்றம்சாட்டி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு பேட்ச் அணிந்து வர முடிவு செய்துள்ளனர்.
மக்களவையில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக மற்றும் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று (மார்ச் 3) கருப்பு பேட்ச் அணிந்து வந்தனர். இந்தநிலையில், திமுக அரசுக்கு எதிராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கருப்பு பேட்ச் அணிந்து வர உள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.