அதிமுக ஆலோசனை கூட்டம்: தேதி மாற்றம்!

By Minnambalam

|

Published on 2 Sep 2023, 9:53 PM

செப்டம்பர் 4 ஆம் தேதி நடைபெறவிருந்த அதிமுக ஆலோசனை கூட்டம் மாற்றப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அதிமுக இன்று (செப்டம்பர் 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.ஜி.ஆர்.மாளிகையில் வருகிற 4-ந்தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்த ஆலோசனை கூட்டம் தேதி மாற்றப்பட்டு 10-09-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ADVERTISEMENT

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டுக் குழுவினர்கள் ஆகிய அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், “கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மு.வா.ஜெகதீஸ் குமார்

முப்பாட்டிகள்ல மூணாவது பாட்டி பேரு: அப்டேட் குமாரு

ADVERTISEMENT

சீமான் -விஜயலட்சுமி: என்ன நடந்தது… என்ன நடக்கிறது… என்ன நடக்கும்?

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel