மதுரையில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டிற்கு பந்தல் அமைப்பதற்கான கால்கோள் விழா இன்று (ஜூலை 9) நடைபெற்றது.
ஆகஸ்ட் 20-ஆம் தேதி மதுரையில் அதிமுக சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு “வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு” என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜூலை 5-ஆம் தேதி அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாநாட்டிற்கான இலட்சினையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தினார். மேலும் மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு முன்னாள் அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகள் அடங்கிய 7 குழுக்களை அமைத்தார்.

அதன்படி கே.பி முனுசாமி தலைமையில் மாநாட்டு ஒருங்கிணைப்பு குழு, வைகை செல்வன் தலைமையில் மாநாட்டு மலர் குழு, செல்லூர் ராஜூ தலைமையில் பந்தல் குழு, சி.விஜயபாஸ்கர் தலைமையில் மாநாட்டு விளம்பரம், செய்தி தொடர்பு மற்றும் நிகழ்ச்சி நிரல் ஒருங்கிணைப்பு குழு, ஆர். காமராஜ் தலைமையில் உணவு குழு, பொன்னையன் தலைமையில் மாநாட்டு தீர்மான குழு, பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் வரவேற்பு குழு அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் மாநாட்டிற்கான பந்தல் அமைப்பதற்கு கால்கோள் விழா இன்று காலை வலையங்குளம் மாநாடு திடலில் நடைபெற்றது. அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழங்க மேள தாளங்களுடன் கால்கோள் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, உதயகுமார், சி.விஜயபாஸ்கர், , கடம்பூர் ராஜூ, பா.வளர்மதி உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செல்வம்
