கருப்பு Vs காவி… கலாய்த்த ஸ்டாலின்… பொங்கிய எடப்பாடி

Published On:

| By Selvam

தமிழக சட்டமன்றத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மீதான மானியக்கோரிக்கை இன்று (ஏப்ரல் 8) நடைபெற்று வருகிறது. AIADMK Legislators wore black

இந்தநிலையில், மக்கள் பிரச்சனை குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கருப்பு உடை அணிந்து சட்டமன்றத்திற்கு வந்திருந்தனர்.

சட்டமன்றத்தில் நேரமில்லா நேரத்தின் போது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவதை நேரலையில் ஒளிபரப்பவில்லை என்றும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு போதுமான நேரம் ஒதுக்குவதில்லை என்று குற்றம்சாட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதன்பின்னர் முதல்வர் ஸ்டாலின் அவையில் பேசும்போது, “எதிர்கட்சியாக இருக்கும் அதிமுகவினர் இன்று கருப்பு சட்டை அணிந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருப்பதால் நான் எனது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல வேளை காவி உடை அணியாமல், கருப்பு உடை அணிந்து வந்திருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “முதல்வர் ஸ்டாலின் எங்களை பற்றி பேசலாமா? ஸ்டாலினுக்கு அடிக்கடி மறதி ஏற்படுகிறது. 1999-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது யாருடன் கூட்டணி அமைத்தீர்கள்? எங்களை வெளியேற்றிவிட்டு நீங்கள் இப்படி பேசியிருக்கிறீர்கள். எங்களை அவையில் வைத்துக்கொண்டு பேசியிருந்தால் தக்க பதிலடி கொடுத்திருப்போம்” என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் விட்டீர்கள். ஆளும்கட்சியான பிறகு பிரதமர் மோடிக்கு வெண் குடை பிடித்தீர்கள்” என்று தெரிவித்தார். AIADMK Legislators wore black

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share