அமித்ஷாவிடம் பேசியது என்ன? செங்கோட்டையன் பேட்டி!

Published On:

| By Kavi

எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்று அமித்ஷாவிடம் எடுத்துச் சொன்னதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார்.

அதிமுகவில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி தனது கருத்தை செங்கோட்டையன் தெரிவித்த அடுத்த நாளே அவரது கட்சி பதவிகளை பறித்தார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

ADVERTISEMENT

இந்தநிலையில் செங்கோட்டையன் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். இதுதொடர்பாக மின்னம்பலத்தில் முதன் முதலில் சசிகலாவின் ‘செங்ஸ்’ ஆபரேஷன்- எடப்பாடிக்கு எதிராக ’10 தலைகள்’? அமித்ஷாவுடன் சந்திப்பு? திகுதிகு அதிமுக! என்ற தலைப்பில் வெளியிட்ட டிஜிட்டல் திண்ணையில் குறிப்பிட்டிருந்தோம்.

அதன்படி நேற்று இரவு, அமித்ஷாவை சந்தித்து பேசினார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இந்த சந்திப்பின் போது, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைப்பது தொடர்பாக பேசியிருக்கிறார்.

ADVERTISEMENT

இதுகுறித்து மின்னம்பலத்தில் எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையனிடம் அமித்ஷா சொன்ன ‘அந்த விஷயம்’- அதிமுகவை ‘பந்தாடும்’ நிர்மலா சீதாராமன் என்ற தலைப்பில் இன்றைய டிஜிட்டல் திண்ணையில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தசூழலில் டெல்லியில் இருந்து திரும்பிய பின் இன்று (செப்டம்பர் 9) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,

ADVERTISEMENT

“நேற்று நான் பயணம் செய்யும் போது ஹரித்வார் செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றேன். டெல்லி சென்றவுடன் எனக்கு உள்துறை அமைச்சரை சந்திக்க அனுமதி கொடுக்கப்பட்டது. அதன்மூலம் நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் இருவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இன்றைய அரசியல் சூழ்நிலை பற்றி கருத்துகள் அங்கு பரிமாறப்பட்டன. எல்லோரும் ஒன்றிணைய வேண்டும், இயக்கம் வலிமை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் அவர்களிடத்தில் எடுத்துச்சொன்னோம்.

இன்று பல்வேறு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அரசியலில் இருப்பவர்கள் அவரவர்களுக்கு ஏற்ப தங்களது விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொருவருக்கும் ஜனநாயக உரிமை இருக்கிறது என்கிற அடிப்படையில் தங்களது கருத்துகளை வெளிப்படுத்துவது வரவேற்கத்தக்கது.

உள்துறை அமைச்சரை சந்திக்கும் போது ரயில்வே துறை அமைச்சரும் வருகைத் தந்தார். ஈரோட்டில் இருந்து புறப்படுகிற ஏற்காடு எக்ஸ்ப்ரஸ் புறப்படும் நேர மாற்றம் குறித்து அவரிடம் பேசினேன். இதை பரிசீலிப்பதாக கூறினார்” என்று தெரிவித்தார்.

அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று பாஜக தலைமையிடம் செங்கோட்டையன் கோரிக்கை வைத்தது அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share