திருவண்ணாமலை அதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசுதா ரத்ததானம் கொடுப்பது போல் போஸ் கொடுத்த நிலையில், அது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். AIADMK jayasudha explains
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 12) தனது 71 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவினர், கோயில்களில் சிறப்பு பூஜை செய்வது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, ரத்ததானம் செய்வது, அன்னதானம் வழங்குவது என கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் திருவண்ணாமலையில், ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சியை அம்மாவட்ட அதிமுக செயலாளர் ஜெயசுதா தொடங்கி வைத்தார்.
ஆனால் அவர் ரத்தம் கொடுக்கவில்லை. தனது கையை மட்டும் காண்பித்தபடி ரத்த தானம் செய்வது போல் படுத்திருந்தார். அவர் ரத்ததானம் கொடுப்பது போல் வீடியோவுக்கு மட்டும் போஸ் கொடுத்த புகைப்படமும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளானது.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். AIADMK jayasudha explains
“ரத்தம் எடுப்பதற்கு தான் தயார் செய்தார்கள். எனக்கு சர்க்கரை நோய் உள்ளது. எனவே சர்க்கரை அளவு எவ்வளவு இருக்கிறது என்று கேட்டார்கள். 210 என்று சொன்னதும் ரத்தம் கொடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். இதில் வேறொன்றுமில்லை. நான் ரத்தம் கொடுத்தேன் என்று பேட்டி ஏதாவது கொடுத்தேனா. இதில் விமர்சிப்பதற்கு என்ன இருக்கிறது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.AIADMK jayasudha explains
