அதிமுக பொதுச்செயலாளர் பதவி : சசிகலா மேல்முறையீட்டு மனு விசாரணை!

Published On:

| By Kavi

அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 30ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் பதவியை நீக்கி ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

இந்த தீர்மானத்தை எதிர்த்து சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நிராகரிப்பு மனுக்களை ஏற்ற உரிமையியல் நீதிமன்றம் சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியம், ஆர்.கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் சசிகலா தரப்பில் முறையிடப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் ஆகஸ்ட் 30 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

பிரியா

ADVERTISEMENT

யுபிஎஸ்சி ப்ரிலிம்ஸ் பாஸ் பண்ண முடியுமா?: உதயநிதிக்கு அண்ணாமலை சவால்!

மதுரை மாநாடு: அதிமுக தொண்டர்களுக்கு ரேஷன் அரிசி சாப்பாடா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share