அதிமுக பொதுக்குழு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன?

Published On:

| By Selvam

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் டிசம்பர் 6-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மேல்முறையீடு செய்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கின் விசாரணை கடந்த நவம்பர் 21-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, நவம்பர் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நாளை (நவம்பர் 30) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கினுடைய விசாரணை டிசம்பர் 6-ஆம் தேதி நடைபெறும் என்று உச்சநீதிமன்ற விசாரணை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் நீதிபதி தினேஷ் மகேஷ்வரி தலைமையிலான அமர்வில், முறையிடப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி, ”பொதுக்குழு தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்பதால் தான் நவம்பர் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

தற்போது ஏன் விசாரணை 6-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது? இதனால் கட்சியின் செயல்பாடுகள் பாதிக்கப்படும்” என்ற வாதத்தை முன்வைத்தார்.

ஓ.பன்னீர் செல்வம் தரப்பில், ”வழக்கின் விசாரணையை டிசம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.

இரு தரப்பினருடைய கோரிக்கைகளையும் நிராகரித்த நீதிபதிகள், ”உச்சநீதிமன்றத்தின் நிர்வாக காரணங்களுக்காக வழக்கினுடைய விசாரணை டிசம்பர் 6-ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது” என்று தெரிவித்தனர்.

இதன்படி அதிமுக பொதுக்குழு வழக்கு டிசம்பர் 6-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.

செல்வம்

விஜயபாஸ்கர் வங்கிக் கணக்கு: வருமானவரித் துறைக்கு உத்தரவு!

மின் இணைப்புடன் ஆதார்: பணம் வாங்கினால் நடவடிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share