டிசம்பர் 15-ல் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்… எடப்பாடி அறிவிப்பு!

Published On:

| By Minnambalam

2026 சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன. அந்தவகையில், எதிர்க்கட்சியான அதிமுக, சமீபத்தில் மாநிலம் முழுவதும் கள ஆய்வு கூட்டத்தை நடத்தி முடித்தது.

இந்தநிலையில், அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 15-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவம்பர் 27) அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சட்ட திட்ட விதிகள் 19(vii) மற்றும் 25(ii)-ன்படி, வருகின்ற 15.12.2024 ( ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.

செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

சென்னையில் இன்று கனமழை இருக்குமா? – பிரதீப் ஜான் சொன்ன அந்த விஷயம்!

தத்துவம் இல்லாத தலைவர்கள்… ‘விடுதலை 2’ பேசும் அரசியல்!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share