120 தொகுதிகளில் இபிஎஸ் போட்டியிட ரூ18 லட்சம் கட்டி விருப்ப மனு தந்த அதிமுக ஒ.செ.

Published On:

| By Mathi

AIADMK

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 120 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட ரூ.18 லட்சம் செலுத்தி விருப்ப மனு கொடுத்துள்ளார் ஆரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் ஜி.வி.கஜேந்திரன்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று டிசம்பர் 22-ந் தேதி விருப்ப மனு கொடுத்தவர்கள்:

ADVERTISEMENT
  • மயிலாப்பூர் அதிமுக மேற்கு பகுதி செயலாளர் ஜெ.விஜய் பாஸ்கர் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மனுத் தாக்கல்
  • எடப்பாடி பழனிசாமி 120 தொகுதிகளில் போட்டியிட, ஒரு தொகுதிக்கு ரூ.15,000 வீதம் ரூ.18,00,000 கட்டி, ஆரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் ஜி.வி.கஜேந்திரன் விருப்ப மனு வழங்கினார்
  • சிவகங்கை மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் எழுவங்கோட்டை செந்தில் சுப்பையா காரைக்குடி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தந்தார்
  • பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அமைப்பு செயலாளர் துரை செந்தில் விருப்ப மனுவை வழங்கினார்.
  • ஆலங்குளம் மற்றும் தி.நகர் தொகுதியில் போட்டியிட, அதிமுக செய்தி தொடர்பாளர் ஜெமிலா விருப்ப மனு தாக்கல் செய்தார்.
  • திருத்தணி தொகுதியில் போட்டியிட அதிமுக செய்தித்தொடர்பாளரும், வழக்கறிஞருமான சிவசங்கரி விருப்ப மனு அளித்தார்
  • கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கே.எம்.எஸ். சிவகுமார் விருப்ப மனு வழங்கினார்
  • பொன்னேரி, திரு.வி.க நகர் தொகுதிகளில் போட்டியிட மருத்துவ அணி செயலாளர் முன்னாள் எம்.பி. வேணுகோபால் விருப்ப மனு தந்தார்
  • முன்னாள் அமைச்சரும் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி. இராமலிங்கம் ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனுவை வழங்கினார்
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share