செங்கோட்டையனுடன் சட்டமன்றத்திற்குள் சமாதான பேச்சுவார்த்தை!

Published On:

| By vanangamudi

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று (மார்ச் 17) நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது. peace talk with Sengottaiyan

இதுதொடர்பாக இன்று காலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் உள்ள தனது அறையில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.

இந்தநிலையில், காலை 9.30 மணிக்கு அவை தொடங்கியதும், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி சார்ந்த கேள்விகளை எழுப்பி வந்தனர். அந்த நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, கடம்பூர் ராஜூ ஆகியோர் சட்டமன்றத்திற்குள் வைத்து செங்கோட்டையனிடம், ‘நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை புறக்கணிக்க வேண்டாம்’ என்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சட்டமன்றத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. peace talk with Sengottaiyan

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share