மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டில் ஒரு சூப்பர் ஹீரோவாக இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். AIADMK election manifesto is a super hero
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. அந்த வகையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு இன்று (ஜனவரி 25) ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், செம்மலை, நத்தம் விசுவநாதன், ஓ.எஸ்.மணியன், பா. வளர்மதி, பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வைகைச்செல்வன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “மக்களின் எண்ணங்களை, கருத்துக்களை, தமிழ்நாட்டின் நலனை பிரதிபலிக்கின்ற வகையிலும் மாநிலத்தின் உரிமைகளை பேணி காக்கின்ற வகையிலும் தேர்தல் அறிக்கை அமையும். கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது குறித்து உரிய நேரத்தில் தெரிவிப்போம்.
திமுக கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தயாரித்த வாக்குறுதிகளை தற்காலிகமாக நம்பினார்கள். ஆனால் இன்றைக்கு நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் என்று மக்கள் முழுமையாக தெளிவு பெற்றுவிட்டார்கள்.
எனவே எந்த விதமான கிலுகிலுப்பையும் காட்டி குழந்தையை ஏமாற்றுவது போல தமிழ்நாட்டு மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது.
அதனால் எங்களது தேர்தல் அறிக்கை ஒரு பெரிய சூப்பர் ஹீரோவாக தமிழ்நாட்டில் இருக்கும். தமிழ்நாட்டின் பிரத்தியேக பிரச்சனைகளை நிறைவேற்றும் வகையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை அமையும்” என்றார்.
தொடர்ந்து திமுக கூட்டணிக் கட்சிகள் அதிமுகவிற்கு வருவார்களா என்ற கேள்விக்கு, “அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பர்களும் இல்லை. என்ன வேண்டுமானாலும் நடைபெறலாம்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
’இந்தியா’ கூட்டணியை உடைத்த 30 வருட ஈகோ- ஆட்டத்தைக் கலைத்த ஆதிர் ரஞ்சன்… மம்தா முடிவு பின்னணி!
சென்னையில் மூன்று கடற்கரைகளை சீரமைக்க சிஎம்டிஏ அசத்தல் திட்டம்!
AIADMK election manifesto is a super hero