அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நவம்பர் 6-ம் தேதி நடைபெறும் என இன்று (நவம்பர் 1) அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன.
இதற்கிடையே நடிகர் விஜய்யும் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தீவிர அரசியலில் களம் இறங்கியுள்ளதால், சட்டமன்ற தேர்தலில் கடும் போட்டி ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
ஏற்கனவே ஆளும் கட்சியான திமுக தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில், அதிமுக தரப்பிலும் தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில் அதிமுக தலைமை கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 6ஆம் தேதி காலை 10 மணிக்கு, மாவட்ட செயலாளர்கள், பிற மாநிலங்களைச் சேர்ந்த செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற உள்ளது” என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா