ADVERTISEMENT

மன வளர்ச்சி குன்றிய சிறுமியிடம் பாலியல் சீண்டல் – அதிமுக கவுன்சிலரின் கணவர் போக்சோவில் கைது!

Published On:

| By Pandeeswari Gurusamy

AIADMK councilor's husband arrested under POCSO

அவிநாசி பகுதியில் மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலரின் கணவரும், அதிமுக கிளைச்செயலாளருமான ராஜேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடமாடும் தையல் தொழிலாளியின் 16 வயது மகள் மனநலம் குன்றிய நிலையில் உள்ளார். அந்த சிறுமியிடம் அவிநாசி நகராட்சி 12வது வார்டு அதிமுக கவுன்சிலரான சாந்தியின் கணவரும், இரு சக்கர வாகனம் பழுது கார்க்கும் ஒர்க்ஷாப் நடத்தி வரும் அதிமுக 12 வது வார்டு கிளைச் செயலாளருமான ராஜேந்திரன் (51) பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஊத்துக்குளி பகுதியில் தலைமறைவாக இருந்த ராஜேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ADVERTISEMENT

மேலும் சிறுமியின் பெற்றோரை மிரட்டியதாக பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் மூர்த்தி (52) என்பவர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share