மதுரை மாநாடு: எடப்பாடி தலைமையில் ஆலோசனை கூட்டம்!

Published On:

| By Selvam

மதுரை மாநாட்டு பணிகளை மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழுவுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 16) அக்கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

ஆகஸ்ட் 20-ஆம் தேதி மதுரையில் அதிமுக சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு “வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு” என்று பெயரிடப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்த முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த வாரம் மதுரை வலையங்குளத்தில் மாநாடு நடைபெறும் திடலில் கால்கோள் நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில் இன்று மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு அமைக்கப்பட்ட குழுவுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அழைப்பிதழ் அச்சடிப்பது, மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

செல்வம்

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ராகவா லாரன்சின் புல்லட்!

ADVERTISEMENT

சரத் பவாரை சந்தித்த அஜித் பவார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share