மாநிலங்களவை தேர்தல்… அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

Published On:

| By Selvam

aiadmk candidates filed nomination

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்பதுரை, தனபால் ஆகியோர் இன்று (ஜூன் 6) வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல் வரும் ஜூலை 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் கூட்டணி கட்சியான மநீம தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

ADVERTISEMENT
aiadmk candidates filed nomination

இதனையடுத்து அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் மூத்த வழக்கறிஞர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக அவைத்தலைவர் தனபால் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். aiadmk candidates filed nomination

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share