ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜனவரி 11) தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக சார்பில் வி.சந்திரகுமார் இன்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் போலவே, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலையும் அதிமுக புறக்கணிக்க உள்ளதாக கடந்த ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்தநிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
போட்டியிட தயார்… அதிமுக அலுவலகத்தில் ஈரோடு ஆற்றல் அசோக் குமார்