அதிமுக, பாஜக, தமாகா-வை பின்னுக்குத் தள்ளிய நாம் தமிழர் கட்சி!

Published On:

| By Kavi

நாம் தமிழர் கட்சி 5 தொகுதிகளில் மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறது. இதில், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

நெல்லை தொகுதியில் அதிமுக (14524 ) நான்காவது இடத்தில் இருக்கும் நிலையில் 14986 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறது நாம் தமிழர் கட்சி.

நாமக்கல்லில் திமுக – 89501, அதிமுக – 87488 வாக்குகள் பெற்றுள்ளன. திமுகவுக்கும் அதிமுகவுக்கும் 2013 வாக்கு வித்தியாசத்தில் கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக – 17576 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திலும், நாதக – 16797 வாக்குகள் பெற்று நான்காம் இடத்திலும் உள்ளன.

அரக்கோணம், ஆரணி, மத்திய சென்னை, வட சென்னை, தென் சென்னை, சிதம்பரம், கோவை, கடலூர், தருமபுரி, கரூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், பொள்ளாச்சி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, ஸ்ரீபெரும்புதூர், தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய தொகுதிகளில் நாதக நான்காம் இடத்தில் உள்ளது.

அதேசமயம், ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை நான்காம் இடத்துக்கு தள்ளி மூன்றாவது இடத்திலும்,

கன்னியாகுமரியில் அதிமுகவை நான்காம் இடத்துக்கு தள்ளி மூன்றாவது இடத்திலும்.

நாகையில் பாஜகவை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்திலும்,

தூத்துக்குடியில் தமிழ்மாநில காங்கிரஸை பின்னுக்கு தள்ளி நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்திலும்,

திருச்சியில் அமமுகவை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்திலும் உள்ளது நாம் தமிழர் கட்சி.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆந்திரா சட்டமன்ற தேர்தல் : ஆட்சியை இழக்கிறாரா ஜெகன் மோகன் ரெட்டி?

நடிகை ஷாலினி பெயரில் போலி கணக்கு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share