2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக- பாஜக கூட்டணியில் (தேசிய ஜனநாயகக் கூட்டணி) அடுத்தடுத்து கட்சிகள் இணைந்து வருகின்றன.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கடந்த 2 நாட்களாக சென்னையில் முகாமிட்டு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கூட்டணியை உறுதி செய்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து தற்போதைய நிலையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள்
- அதிமுக
- பாஜக
- பாமக (அன்புமணி)
- அமமுக
- தமாகா
- இந்திய ஜனநாயக கட்சி
- புதிய நீதிக் கட்சி
- புதிய பாரதம் கட்சி
- தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
- உழவர் உழைப்பாளர் கட்சி
- ஜனதா தளம் செக்யூலர்
இந்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நாளை ஜனவரி 23-ந் தேதியன்று பிரதமர் மோடி கலந்து கொள்ளும் மதுராந்தகம் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வர்.
