கூட்டணி: அண்ணாமலைக்கு எடப்பாடி பதில்!

Published On:

| By Monisha

அதிமுக – பாஜக கூட்டணி குறித்து மத்தியில் இருக்கின்றவர்கள் தான் முடிவு செய்வார்களே தவிர மாநிலத்தில் இருக்கின்றவர்கள் அல்ல என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே அதிமுக பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டிருந்தது. நிர்வாகிகள் சில பேர் பாஜகவை விட்டு வெளியேறி கூட்டணிக் கட்சியான அதிமுகவில் இணைந்தனர். இதனால் அதிமுக பாஜக கூட்டணியில் பிளவு ஏற்படுமா என்ற விவாதங்கள் எழுந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில் கடந்த மார்ச் 17 ஆம் தேதி சென்னையில் பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணிகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “தேசிய தலைமை அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொன்னால் நான் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டுப் போய் விடுவேன்” என்று கூறியிருந்தார்.

இது பெரிதளவில் பேசப்பட்ட நிலையில் கூட்டணியில் முறிவு கிடையாது என்று அதிமுக மற்றும் பாஜக சார்பில் தொடர்ந்து விளக்கம் அளிக்கப்பட்டு வந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வான பிறகு முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி நேற்று (ஏப்ரல் 2) சேலம் சென்றிருந்தார். அங்கு அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து இன்று காலை நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து சேலம் நான்கு ரோடு, அண்ணா பூங்கா அருகே அமைந்திருக்கக்கூடிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ADVERTISEMENT

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்தியில் பாஜக ஆளுகின்ற கட்சி. கூட்டணி பொறுத்தவரையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாஜக தலைவர் ஜே.பி. நட்டா தான் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள். மாநிலத்தில் இருக்கின்றவர்கள் அல்ல.

மத்தியில் இருக்கின்றவர்கள் கூட்டணி தொடரும் என்று சொல்லியிருக்கிறார்கள். விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கின்றோம்” என்று பேசினார்.
முன்னதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா “தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணியில் தான் இருக்கிறோம்” என்று சொல்லியிருந்தார்.

நேற்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ”அதிமுக பாஜக கூட்டணி வலுவாக உள்ளது” என்று பேசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து, “அகில இந்திய தலைவர்கள் நன்றாக யோசனை செய்துவிட்டு தான் கூட்டணி குறித்து முடிவெடுக்கிறார்கள். மாநில தலைவராக என்னுடைய கருத்தை அமித்ஷாவிடம் கூறியிருக்கிறேன். அவர் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது என்று கூறினாரே தவிர கூட்டணியை உறுதி செய்யவில்லை. தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கும் போது கூட்டணி குறித்து முதலுரையும் முடிவுரையும் எழுத முடியாது. தொகுதி பங்கீடு முடிந்தால் தான் கூட்டணிக் கட்சி உறுதியாகி விட்டது என்று கூற முடியும்” என்று பேசியிருந்தார்.

அண்ணாமலையின் கருத்துக்கு பதில் கூறும்விதமாக எடப்பாடி பழனிசாமி, “கூட்டணி குறித்து தேசிய தலைவர்கள் தான் முடிவெடுப்பார்கள். மாநில நிர்வாகிகள் முடிவெடுக்க மாட்டார்கள்” என்று கூறியுளார்.

மோனிஷா

விடுதலை சர்ச்சை: தியேட்டரில் நடந்தது என்ன? வளர்மதி விளக்கம்!

ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு: இன்று விசாரணை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share