ADVERTISEMENT

கூட்டணி ஆட்சி.. நிராகரித்தால் பாஜகவில் இருந்து விலகல்? அண்ணாமலை வீசிய அணுகுண்டு!

Published On:

| By Mathi

Annamalai Press meet

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமைப்போம் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா சொல்வதை நியாயப்படுத்தி பேச முடியாத சூழலில் நான் ஏன் அரசியல் கட்சியில் இருக்க வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். BJP Annamalai

சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று ஜூலை 17-ந் தேதி அண்ணாமலை கூறியதாவது: பாரதிய ஜனதா கட்சியின் ஒரு தொண்டனாக நான் சொல்கிறேன்.. இந்த கூட்டணி உருவானதில் என் பங்கு இல்லை; இந்த கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது என்பதில் என் பங்கு இல்லை. இந்த கூட்டணி எப்படி இருக்க வேண்டும் என யார் பேசினார்கள் என்பதிலும் என் பங்கு இல்லை.

ADVERTISEMENT

அமித்ஷா பலமுறை சொல்லிட்டாரே

அப்படியான நிலையில் என்னுடைய தலைவர் அமித்ஷா சொல்வதைத்தான் நான் கேட்டாக வேண்டும். அவர் பலமுறை மிகத் தெளிவாகவே சொல்லிய பிறகு, ஒரு தொண்டனாக நான் கருத்தை மாற்றிக் கொண்டு ‘கூட்டணி ஆட்சி இல்லை’ என சொல்ல முடியாது.

ADVERTISEMENT

தொண்டனாக இருக்க தகுதி இல்லை

அப்படி கூட்டணி ஆட்சி இல்லை என நான் சொன்னால், இந்த கட்சியில் நான் தொண்டனாக இருக்க எனக்கு தகுதி இல்லை. என்னுடைய தலைவர் சொன்ன கருத்தை நான் ஏற்றுக் கொள்ள முடியாமல், என்னுடைய தலைவர்கள் கருத்தை நான் வலுப்படுத்த முடியாமல், அந்த கருத்துகளில் நான் சந்தேகத்தை எழுப்பினால் இந்த கட்சியில் நான் தொண்டனாக இருக்கக் கூடாது; தலைவனாகவும் இருக்கக் கூடாது; இது என்னுடைய கருத்து.

ADVERTISEMENT

கூட்டணி ஆட்சிதான்

என்னைப் பொறுத்தவரையில் தலைவர்கள் பேசியிருக்கிறார்கள்; எனக்கு அதில் பங்கு இல்லை. ஆனால் என்னுடைய தலைவர்கள் பேசியதை நான் தூக்கிப் பிடித்தாக வேண்டும். அவர்கள் கூட்டணி ஆட்சிதான் என பேசியதாக நான் நம்புகிறேன். ஆகையால் இதில் உறுதியாகவும் இருக்கிறேன்,

நிலைப்பாடு மாற்றம் எப்போது?

என்னுடைய தலைவர்கள், தொண்டர்களை- நிர்வாகிகளைக் கூப்பிட்டு நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டால் நானும் மாற்றிக் கொள்கிறேன். ஆனால் உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தக் கூட்டணியை உருவாக்கியவர்.. இந்த கூட்டணி எப்படி இருக்க வேண்டும் என நினைத்தவர், ஒரு கருத்தை சொல்லியபிறகு ஒரு தொண்டனாக நான் எப்படி அந்த கருத்தில் மாறுபட முடியும்?

கூட்டணியை உடைக்க முயற்சியா?

அண்ணாமலை ஏதோ கூட்டணியை உடைக்கப் பார்க்கிறார்..பிளக்கப் பார்க்கிறார் என நான்கு பேர் வருவான். ஆனால் என்னுடைய தலைவர் பேசிய கருத்தை நான் ஸ்டேண்ட் செய்யலைன்னா ஒரு பிஜேபி தொண்டனா, தலைவனாக இருக்க நான் தகுதி இல்லை என்றுதான் அர்த்தம்.

கூட்டணி ஆட்சியை வலியுறுத்தும் கட்சிகள்

அமித்ஷாஜி தொடர்ந்து சொன்னார். இதில் அதிமுக மாற்றுக் கருத்து இருக்கலாம். இதை உட்கார்ந்து பேசலாம். பாமக, புதிய தமிழகம் கட்சித் தலைவர்கள் தெளிவாக கூட்டணி கட்சி ஆட்சியில் உட்கார நாங்க ஏன் கஷ்டப்பட்டு வேலை செய்யனும் என சொல்கின்றனர். தேமுதிக பிரேமலதா அக்காவும் கூட்டணியில் இருக்கனும்.. நாங்க ஏன் கஷ்டப்பட்டு வேலை பார்க்கனும் என்கிறார். அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி ஆட்சி குறித்து பேசத் தொடங்கிவிட்டனர்.

பாஜக தொண்டனின் குரல்

ஒவ்வொரு தொண்டனும் வேலையை விட்டுவிட்டு கட்சிக்காக நேரம் ஒதுக்கும்போது அந்த தொண்டன் எதிர்பார்க்கிறான்.. எதற்காக கட்சிக்கு நேரம் கொடுக்கிறான்? எதுக்காக போஸ்டர் ஒட்டனும்? பெயிண்ட் டப்பாவை கையில் எடுக்கனும்? இந்த கட்சியில் 100 பேர் கூட எம்.எல்.ஏ.வாகலாம்.. ஆனால் இத்தனை லட்சம் தொண்டர்களின் ஆசை என்ன? நம்ம கட்சியினர் அமைச்சராவதைப் பார்த்து பெருமைப்படுவதுதான். அதைத்தான் ஒவ்வொரு தொண்டனும் எதிர்பார்க்கிறான். எல்லா தொண்டனுக்கும் சீட் கிடைக்காது. நான் தொண்டர்களின் குரலாக பேசிக் கொண்டே இருக்கிறேன்.

பாஜகவில் ஏன் இருக்கனும்?

இதில் என்னுடைய தனிப்பட்ட கருத்தாக நான் எதையும் பேசவில்லை. அமித்ஷா பேசியதைத்தான் இங்க முன்னர் நான் வைக்கிறேன். இல்லை.. இல்லை.. இதை எல்லாம் தேர்தல் நேரத்தில் பார்க்கலாம் என்றால் என்னுடைய தலைவரையே டிபெண்ட் செய்ய முடியாத நான் ஏன் அரசியல் கட்சியில் இருக்க வேண்டும்? இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share