அதிமுக 53-ஆம் ஆண்டு தொடக்க விழா: எடப்பாடி முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Selvam

அக்டோபர் 17-ஆம் தேதி முதல் அக்டோபர் 20-ஆம் தேதி வரை அதிமுகவின் 53-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்டோபர் 4) தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் அக்டோபர் 17-ஆம் தேதி அதிமுக தனது 53-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, 17.10.2024 முதல் 20.10.2024 வரை நான்கு நாட்கள் ‘அதிமுக 53-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள்’ அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தாங்கள் சார்ந்த சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 17.10.2024 அன்று ஆங்காங்கே  எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து இனிப்பு வழங்கியும் ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“மூத்த வழக்கறிஞர் வில்சனிடம் கண்ணியக்குறைவாக பேசிய நீதிபதி” : வைரலாகும் வீடியோ – வழக்கறிஞர் சங்கம் எதிர்ப்பு!

நாம் தமிழர் அவதூறு: எக்ஸ் வலைதள அதிகாரிக்கு நோட்டீஸ்… எஸ்.பி வருண் குமார் வழக்கில் உத்தரவு!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share