மும்பை வெள்ளத்தை எதிர்கொள்ளும் வகையில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வாகனங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பையில் இந்த ஆண்டு பருவமழை இரண்டு வாரங்கள் தாமதமாக தொடங்கியது. இருப்பினும் அங்கு ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது.
பல இடங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை பேரிடர் மீட்புப் படையினர் மீட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைத்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மும்பை மழையின் போது #mumbairains என்ற ஹேஷ்டேக் டிரண்டாகி விடும். இந்த ஆண்டு ஹேஷ்டேக்குடன் சேர்த்து செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட சில கற்பனை படங்களும் வைரலாகி வருகிறது.

ஒரு கலைஞர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மழை வெள்ளத்திலும் பயணிக்கக் கூடிய வாகனங்களை உருவாக்கியிருக்கிறார்.
மனோஜ் ஓம்ரே என்ற அந்த கலைஞர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அந்த புகைப்படங்களில் தண்ணீரில் மிதக்கும் மேற்கூரையுள்ள ஸ்கூட்டர், படகு, பஸ் உள்ளிட்டவை உள்ளன. புகைப்படங்களுடன் சேர்த்து ”மும்பைக்காக தற்போது உருவாக்கியிருக்க வேண்டிய விஷயங்கள்” என்று கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.

தண்ணீரில் மிதக்கும் வகையில் உருவாக்கப்பட்ட அந்த கற்பனை வாகனங்களில் மனிதர்கள் அமர்ந்திருப்பதையும் காண முடிகிறது.

இந்த புகைப்படங்களைக் கண்ட இணைய வாசிகள் பலரும் இந்த காலகட்டத்திற்கு இது போன்ற வாகனங்கள் தேவை என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மோனிஷா
“நம் நாடு 1947 இல் பிறந்தது என்பது ஜோக் – இது சனாதன நாடு” -ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!
ஆளுநரை திரும்ப பெற வேண்டும்: குடியரசு தலைவருக்கு வழக்கறிஞர்கள் கடிதம்!
