புதுச்சேரியில் டிசம்பர் 9-ந் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரி அக்கட்சியினர் போலீசாரிடம் மனு கொடுத்துள்ளனர். இதனையடுத்து தவெகவினர் அனுமதி கேட்ட உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் போலீசார் ஆய்வு நடத்தினர்.
புதுச்சேரியில் இன்று டிசம்பர் 5-ந் தேதி ரோடு ஷோ நடத்த விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால் புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த அனுமதி கிடைக்கவில்லை. இதன் பின்னணி குறித்து மின்னம்பலத்தில் விரிவாக எழுதி இருந்தோம்.

இந்த நிலையில் புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு பகுதியில் டிசம்பர் 9-ந் தேதி விஜய் பங்கேற்கும் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கோரி தவெகவினர் போலீசில் மனு கொடுத்தனர். இதனையடுத்து உப்பளம் ஹெலிபேடு பகுதியை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த ஆய்வைத் தொடர்ந்து விஜய் பொதுக் கூட்டத்துக்கான அனுமதி குறித்து போலீசார் முடிவு எடுப்பர்.
