ADVERTISEMENT

தீபாவளி பண்டிகை: 2 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்!

Published On:

| By christopher

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜூலை 13) திறக்கப்பட்ட நவம்பர் 10ஆம் தேதிக்கான ரயில்வே டிக்கெட்டுகள் 2 நிமிடங்களில் விற்று தீர்ந்தன.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமைநாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.  இதனை முன்னிட்டு வெளியூர் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது.

ADVERTISEMENT

நவம்பர் 9ஆம் தேதிக்காக நேற்று தொடங்கிய முன்பதிவில் ரயில் டிக்கெட்டுகள் 10 நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தன.

இதனையடுத்து நவம்பர் 10ஆம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

ADVERTISEMENT

ஆனால் நேற்றை விட விரைவாக இன்று முன்பதிவு தொடங்கிய 2 நிமிடங்களிலேயே சென்னையிலிருந்து செல்லும் நெல்லை, தூத்துக்குடி மதுரை, கோவை ரயில்களுக்கான டிக்கெட் விற்பனை முடிந்தது.

இதனையடுத்து தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 11 ஆம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு, நாளை காலை தொடங்குகிறது.

ADVERTISEMENT

ரயிலில் பயணம் மேற்கொள்வதற்கு வசதியாக 4 மாதங்களுக்கு (120 நாட்கள்) முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய ஏற்பாடு அறிவுறுத்தியுள்ளது. இதனை ரயில்வே கவுண்ட்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் விழாக்காலங்களில் ரயில் பயணத்திற்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க்க்கோரி பயணிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

மீண்டும் சாம்பியன் ஆன கோவை கிங்ஸ்!: வெற்றி ரகசியம் சொன்ன ஷாருக்கான் 

உயர்ந்து கொண்டே போகும் தக்காளி விலை! 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share