வேளாண் பட்ஜெட் : கலைஞர் உருவப்படத்திற்கு அமைச்சர் மரியாதை!

Published On:

| By christopher

Agriculture Budget: Minister honours kalaingar

வேளாண் துறைக்கென தமிழக அரசின் தனி பட்ஜெட்டானது 4ஆவது முறையாக சட்டப்பேரவையில் இன்று (பிப்ரவரி 20) தாக்கல் செய்யப்பட உள்ளது.

கடந்த சட்டமன்ற திமுக தேர்தல் அறிக்கையில், வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

அதன்படி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, கடந்த 2021 ஆகஸ்ட் 14ஆம் தேதி தமிழ்நாட்டின் தனி வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முதன்முறையாக தாக்கல் செய்தார்.

2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளிலும் தனியாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார்.

அதனைத்தொடர்ந்து, வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்ய உள்ளார்.

Image

அதனை முன்னிட்டு கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் உருவப்படத்திற்கு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.

இந்த வேளாண் பட்ஜெட்டில் விவாசியிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2023-24 ஆம் நிதி ஆண்டில் வேளாண் பட்ஜெட்டில் ரூ.38,904 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

”ஏன் தோனி இப்படி செய்தீர்கள்?” : மனோஜ் திவாரி ஆதங்கம்!

வேலைவாய்ப்பு: விமான நிலைய ஆணையத்தில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share