தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 15) வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். Agriculture Budget 2025
அதன் முக்கிய அம்சங்கள்…
நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்திற்கான இழப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படும். இயற்கை மரணத்திற்கான நிதி ரூ.20,000-ல் இருந்து ரூ.30,000 ஆக உயர்த்தப்படும்.
இறுதிச்சடங்கு நிதியுதவி ரூ. 2,500-ல் இருந்து ரூ. 10,000 ஆக உயர்த்தப்படும்.
மானாவாரி நிலங்களில் 3 லட்சம் ஹெக்டேரில் கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2,000 மானியம் வழங்கப்படும்.
100 முன்னோடி உழவர்களை நெல் உற்பத்தித்திறனில் சாதனை அடைந்துள்ள ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் செல்ல ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
பசுமைத் தமிழ்நாட்டை உருவாக்க, “தமிழ்நாடு வேளாண்காடுகள் கொள்கை” விரைவில் கொண்டு வரப்படும்.
இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் வருவாய் இழப்புக்காக பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.841 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
பருத்தியின் உற்பத்தியை அதிகரித்திட “பருத்தி உற்பத்திப் பெருக்குத் திட்டம்” ரூ.12.21 கோடியில் செயல்படுத்தப்படும்.
7 புதிய அரசு விதை சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ.15.05 கோடியில் செயல்படுத்தப்படும்.
இயற்கை வேளாண்மைக்கான திட்டம் ரூ. 12 கோடியில், 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
ரூ.250 கோடியில் உழவர்களின் நிலங்களில் விதைப்பண்ணைகள் அமைத்து விதைகள் கொள்முதல் செய்யப்படும்.
நெற்பயிருக்கு மாற்றாக குறைந்த நீர்த் தேவையுள்ள பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.12.50 கோடியில் மாற்றுப்பயிர் சாகுபடித் திட்டம் அமல்படுத்தப்படும்.
முதலமைச்சர் மன்னுயிர் காப்போம் திட்டம், ரூ.146 கோடி செலவில் இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும்.
கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் 2,335 ஊராட்சியில் ரூ. 269 கோடியில் செயல்படுத்தப்படும். ஏற்கனவே இத்திட்டம் 10,157 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டது.
சிறு தானிய இயக்கத்தை செயல்படுத்த ரூ. 52 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
அதிக உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருது வழங்க ரூ. 55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த ஆண்டும் மூன்று சிறந்த உழவர்களுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும்.
தமிழகத்தில் அதிக விளைச்சலைக் கொடுக்கும் முதல் விவசாயிக்கு ரூ.2.50 லட்சமும், இரண்டாவது விவசாயிக்கு 1.50 லட்சமும், மூன்றாவது இடம் பிடிக்கும் விவசாயிக்கு ரூ.1 லட்சமும் பரிசுத் தொகை வழங்கப்படும் Agriculture Budget 2025