இயக்குனராக ஜெயித்திருக்கிறாரா பா.விஜய்? Aghathiyaa Movie Review 2025
ஆக்ஷன், ஹாரர், த்ரில்லர், பேண்டஸி, ரொமான்ஸ், ட்ராமா, ஹிஸ்டரி என்று ஒரே திரைப்படத்தில் பல வகைமைக்கான அடையாளங்களைப் பொதித்து வைப்பது இன்றைய இயக்குனர்களின் வழக்கமாகிவிட்டது. Aghathiyaa Movie Review 2025
ஒருகாலத்தில் கமர்ஷியல் திரைப்படங்கள் இப்படி ‘காக்டெய்ல்’ ஆகத்தான் வந்தன என்றாலும், இப்போது குறிப்பிட்ட வகைமைகளின் சாரம் அதிகமாகத் தென்படுகிறது. அதுவே, இன்று வெற்றிக்கான பார்முலா ஆகவும் கருதப்படுகிறது.
அந்த வகையில், இந்த வாரம் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது பாடலாசிரியர் பா.விஜய் எழுத்தாக்கம் செய்து இயக்குனராக அறிமுகமாகியிருக்கிற ‘அகத்தியா’.
2020இல் தொடங்கப்பட்ட இந்தப் படைப்பு, மெதுமெதுவாக வளர்ந்து நிறைவு பெற்று இப்போது திரையை எட்டியிருக்கிறது. இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
ஜீவா, அர்ஜுன், ராஷி கன்னா, ஷரா, ரெடின் கிங்க்ஸ்லி, ரோகிணி, சார்லி, மெட்டில்டா, எட்வர்ட் சோனன்ப்ளிக், செந்தில், ராதாரவி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
எப்படிப்பட்ட திரையனுபவத்தைத் தருகிறது ‘அகத்தியா’?

Aghathiyaa Movie Review 2025
இதுவும் ‘பேய்க்கதையா’? Aghathiyaa Movie Review 2025
‘அகத்தியா’ படத்தின் ஒருவரிக்கதை மிக சுவாரஸ்யமானது. ’ஸ்கேரி ஹவுஸ்’ என்ற பெயரில் பார்வையாளர்களை ஈர்க்கப் புதுப்புது சுவாரஸ்யங்களை ஒரு குழுவினர் மேற்கொண்டு வரும் நிலையில், அந்த இடத்தில் ஏற்கனவே சில பேய்கள் இருந்தால் எப்படியிருக்கும் என்று திகிலூட்டுகிறது ‘அகத்தியா’. Aghathiyaa Movie Review 2025
அகத்தியா (ஜீவா) என்றொரு கலை இயக்குனர். அவர் தான் பணியாற்றுகிற முதல் படத்திற்காகக் கடன் வாங்கி ‘செட்’ அமைக்கிறார். பாண்டிச்சேரியிலுள்ள ஒரு பெரிய பங்களாவில் அது அமைக்கப்படுகிறது. அந்த நேரத்தில், படப்பிடிப்பை உடனே நடத்த முடியாது எனத் தயாரிப்பாளர் கைவிரிக்கிறார். Aghathiyaa Movie Review 2025
வாங்கிய கடனை அடைப்பது எப்படி என்று தெரியாமல் விழி பிதுங்குகிறார் அகத்தியா. தன்னையே வெறுக்கத் தொடங்குகிறார். Aghathiyaa Movie Review 2025
அப்போது, அந்த இடத்தில் போடப்பட்ட செட் உடன் மேலும் சில விஷயங்களைச் சேர்ந்து ஒரு ‘ஸ்கேரி ஹவுஸ்’ ஆக்கி, டிக்கெட் விற்று ’ஷோ’ நடத்தலாம் என்கிறார் அகத்தியாவின் காதலி வீணா (ராஷி கன்னா). அதனை ஆமோதிக்கிறார் அகத்தியா.
அந்தக் கணத்தில், அவர் தன் முன்னே ஒரு அதிசயம் நிகழ்ந்ததாகத் தோன்றுகிறது.
பிறகு, ‘ஸ்கேரி ஹவுஸ்’ஸில் சில விசித்திரமான விஷயங்கள் நிகழ்கின்றன. அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த பியானோவை எடுத்து வாசிக்கையில், சில புதிர்களுக்குப் பதில் கிடைக்கிறது. அவை, அங்கு ஜேக்குலின் பூவிழி (மெட்டில்டா) எனும் பெண் அந்த பங்களாவில் வாழ்ந்ததையும், அவரது சகோதரர் எட்வின் டூப்ளெக்ஸ் (எட்வர்ட் சோனன்ப்ளிக்) கொடூரமாக மக்களைச் சித்திரவதை செய்ததையும் அறிகிறார் அகத்தியா.
அந்த பங்களாவுக்கு சித்தார்த்தன் (அர்ஜுன்) என்ற சித்த வைத்தியர் பிரான்ஸ் நாட்டு ராணியால் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதை அறிகிறார் அகத்தியா. நடக்க முடியாத நிலையில் இருக்கும் ஜேக்குலினை அவர் நடக்க வைக்கச் சில முயற்சிகளை மேற்கொள்கிறார். இயல்பிலேயே இந்தியர்களை மட்டமானவர்களாகக் கருதும் எட்வினுக்கு அது பிடிக்கவே இல்லை. போதாக்குறைக்கு ஜேக்குலின் வேறு சித்தார்த்தனோடு நெருக்கம் பாராட்டுகிறார்.
அதன்பின் என்னவானது? சித்தார்த்தன் என்ன ஆனார்? அந்த பங்களாவில் எட்வின் ஆன்மா எதற்காக உலாவுகிறது? இது போன்ற கேள்விகளுக்குக் கொஞ்சம் காதைச் சுற்றி மூக்கைத் தொடுகிறது ‘அகத்தியா’ கதை. ’இதுவும் பேய்க்கதையா’ என்பதாகக் கதை அமைந்தாலும், இதில் வெவ்வேறு உணர்வுகள் ஒளிந்திருக்கின்றன. அதுவே இக்கதையின் வெற்றி.

கலவையான ‘உணர்வு’!
’அகத்தியா’வில் ஆன்மிகம் தொடங்கி ஹாரர், த்ரில்லர், அட்வெஞ்சர், பேண்டஸி, ட்ராமா என்று எத்தனையோ வகைமைகள் கலந்து கிடக்கின்றன. இப்படத்தின் பலமாகவும் பலவீனமாகவும் அந்த அம்சமே இருக்கிறது. Aghathiyaa Movie Review 2025
‘இதெல்லாம் அபத்தம்’ எனும்படியான காட்சிகள் ‘அகத்தியா’வில் அதிகம் இல்லை. அதே நேரத்தில், இப்படத்தைப் பார்த்து முடிக்கும்போது கலவையான உணர்வே மேலுழுகிறது.
ஜீவாவுக்கு இதில் வழக்கமான ‘ஹீரோயிச’ பாத்திரம் தான். ஆனாலும், அதனை வேறுவிதமாகத் திரையில் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அவரை இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பார்ப்பவர்களுக்கு இது ஒரு நல்ல மாற்றமாகத் தெரியும்.
அர்ஜுனுக்கு இக்கதையில் முக்கியத்துவம் இருக்கிறது. பிளாஷ்பேக், நிகழ்காலம் என்று திரைக்கதை பயணிப்பது அதற்கொரு முக்கியக் காரணம். அதனால், அவர் தனது பாத்திரத்தை மிக இலகுவாகச் சுமந்திருக்கிறார்.
ராஷி கன்னா அழகான நாயகியாகத் தோன்றினாலும், அவரது தோற்றம் நம்மை அமைதிப்படுத்துவதாக இல்லை.
ஷரா அடிக்கிற சில கமெண்ட்கள் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கத் தக்கவை. ரெடின் கிங்க்ஸ்லியும் கூடத் தன்னால் ஆனதை முயன்றிருக்கிறார். சில இடங்கள் சிரிப்பை விதைத்திருக்கின்றன.
இவர்கள் தவிர்த்து மூத்த கலைஞர்கள் சார்லி, ரோகிணி, செந்தில், ராதாரவி, நிழல்கள் ரவி ஆகியோர் இதிலுண்டு. அவர்களது இருப்பு, அப்பாத்திரங்களோடு எளிதாக ஒன்ற வைக்கிறது. யோகிபாபு, விடிவி கணேஷ், அபிராமி, பூர்ணிமா பாக்யராஜ், கின்னஸ் பக்ரூ உட்படச் சிலர் இதில் கௌரவமாகத் தலைகாட்டியிருக்கின்றனர்.
’ஹாரர்’ கதைக்குரிய கேமிரா கோணங்கள் இருந்தாலும் கூட, ‘அகத்தியா’ ஒரு பேண்டஸி அட்வெஞ்சர் ஆகவே தெரியும். ‘ட்ராமா’ உள்ளிட்ட சில வகைமைகள் இக்கதையில் அருமையாகக் கலந்திருக்கின்றன.
ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி, படத்தொகுப்பாளர் சான் லோகேஷ், கலை இயக்குனர் சண்முகம் மற்றும் பின்னணி இசை தந்த யுவன்சங்கர் ராஜா தொடங்கி தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் நல்லதொரு பங்களிப்பைத் தந்திருக்கின்றன.
யுவனின் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இக்கதையில் சில இடங்கள் பரபரப்பாக நகர்கின்றன; சில இடங்கள் மந்தமாக இருக்கின்றன. இக்கதையில் ஆன்மிகத்தை வலிந்து திணித்திருக்கிறார் இயக்குனர்.
கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் இடம்பெற்றிருக்கும் விஎஃப்எக்ஸ் காட்சி, அநியாயத்துக்கு அனிமேஷன் படம் பார்த்தது போலிருக்கிறது. இது போன்று இன்னும் சில குறைகள் இதிலுண்டு. அவற்றைப் புறக்கணித்துவிட்டுப் பார்த்தால், ‘அம்புலி மாமா’ கதை படித்த எபெக்ட் கிடைக்கக்கூடும்.
‘எக்ஸ்ட்ரா சுவை’ கூட்டாமல், இத்திரைக்கதையில் இருக்கும் சுவைகளை அப்படியே வெளிப்படுத்தியிருந்தால் ‘அகத்தியா’ இன்னும் கொண்டாடப்பட்டிருக்கும். ஆங்காங்கே ‘பிரேக்’ போடுகிற திரைக்கதை, சுமாரான விஎஃப்எக்ஸ் தரம் என்று சில சறுக்கல்கள் இருந்தாலும், ஒரு இயக்குனராக ‘அட’ என்று வியக்க வைத்திருக்கிறார் பா.விஜய். அதில் பெரிய வெற்றியை ஈட்டியிருக்கிறாரா என்றால் ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டும்.
எடுத்துக்கொண்ட ‘ஹாரர் காமெடி’ வகைமைக்கு இடம் கொடுத்துச் சில கதாபாத்திரங்களையும் நகைச்சுவையையும் கலந்திருந்தால், இப்படம் இன்னொரு உயரத்தைத் தொட்டிருக்கும். இப்போது ‘ஓகே’ எனும்படியான வெற்றியைப் பெற்றிருக்கிறது.
