கிச்சன் கீர்த்தனா : அகத்திக்கீரை குழம்பு

Published On:

| By Minnambalam

வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆற்றும் அருமருந்து அகத்திக்கீரை. சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ அதிகளவு உள்ள அகத்திக்கீரையை பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து  சாப்பிட நன்கு பால் சுரக்கும்.

இப்படிப்பட்ட அகத்திக்கீரையை வாரத்துக்கு ஒருமுறை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. அதற்கு இந்த ரெசிப்பி உதவும். வேண்டாம் என்று சொல்பவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

ADVERTISEMENT

என்ன தேவை?

அகத்திக்கீரை – ஒரு கப்
தேங்காய்த் துருவல் – ஒரு மூடி
பாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
காய்ந்த மிளகாய் – ஒன்று
தக்காளி – ஒன்று
அரிசி களைந்த நீர் – ஒரு கப்
சாம்பார் பொடி – தேவைக்கேற்ப
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய்  – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

ADVERTISEMENT

எப்படிச் செய்வது?

அகத்திக்கீரையை நீரில் அலசி நீரை, வடியவிட்டு கீரையை உருவி மீடியம் சைஸில் நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை வட்டமாகவும், தக்காளியைப் பொடியாகவும் நறுக்கி வைக்கவும்.

ADVERTISEMENT

பாசிப்பருப்பை வேகவைத்து எடுத்து வைக்கவும். தேங்காய்த் துருவலில் தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து பால் எடுக்கவும்.

அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து, வதங்கும்போது கீரையையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

இத்துடன் சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். அரிசி களைந்த நீர் சேர்த்துக் கீரையை வேகவிடவும். கீரை வெந்ததும், வேகவைத்த பாசிப்பருப்பைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப்பால் விட்டு கிளறி இறக்கவும்.

அரைக்கீரை பக்கோடா

செங்கோட்டை பார்டர் பரோட்டா

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share