டெல்லி அணியை நேற்று (மே 24) இரவு எதிர்கொண்ட பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. again top 2 punjab kings lost to dc by 6 wickets
ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற 4 அணிகளில் யார் முதல் இரண்டு இடங்களை பிடிப்பது என்பது தான் இப்போது போட்டியே.
அதன்படி அதற்காக கடந்த இரண்டு நாட்களில் கடுமையாக போராடிய குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் தோல்வியை தழுவின. குறிப்பாக நேற்று முன் தினம் ஹைதராபாத் அணிக்கு அணிக்கு எதிராக மோசமான தோல்வியை தழுவிய ஆர்.சி.பி அணியின் ரன்ரேட் சரிந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
இந்த நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற மற்றொரு அணியான பஞ்சாப் கிங்ஸ் அணி, நேற்று இரவு டெல்லி கேப்பிடல்ஸ் அணியை ஜெய்ப்பூரில் எதிர்கொண்டது.

டாஸ் வென்ற டெல்லி பவுலிங் தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்கள் அடித்தார். கடைசியில் இறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் 16 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் அடித்தார். டெல்லி அணி தரப்பில் முஸ்தாபிஸூர் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதனையடுத்து 207 எடுத்தால் வெற்றி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய கேஎல் ராகுல் 35 ரன்களும், பாப் டூப்ளிசிஸ் 23 ரன்களும் அடித்தனர்.
அடுத்து களம் கண்ட கருண் நாயர் 27 பந்துகளில் 44 ரன்களும், தனது முதல் போட்டியில் அறிமுகமான செடிகுல்லா அடல் 16 பந்துகளில் 22 ரன்கள் அடித்தனர்.

15 ஓவர்களில் 155 ரன்கள் குவித்த நிலையில், கடைசி கட்டத்தில் சமீர் ரிஸ்வியின் ருத்ர தாண்டவ ஆட்டம் டெல்லி அணியை வெற்றி பெற வைத்தது. 5 சிக்சர்கள் 3 பவுண்டரியுடன் 22 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் அரை சதத்தை அடித்து அவர் அசத்தினார்.
இதன்மூலம் 19.3 ஓவரில் 208 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. again top 2 punjab kings lost to dc by 6 wickets