கோலிவுட்டில் உச்சநட்சத்திரமாக திகழ்ந்தாலும், நடிகர் அஜித்குமார் தற்போது கார் பந்தயத்தில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். தனது பெயரில் கார் ரேஸிங் நிறுவனம் ஆரம்பித்து, சர்வதேச கார் பந்தயங்களிலும் பங்கேற்று வருகிறார். again ajithkumar met accident in gt4 track… but
இந்த நிலையில் இத்தாலியில் உள்ள ரோம் நகரத்தில் இன்று (ஜூலை 20) நடைபெற்ற ஜிடி 4 ஐரோப்பியன் கார் பந்தயத்தில் பங்கேற்றார். அப்போது வளைவில் திரும்பும்போது முன்னால் சென்ற கார் திடீரென டிராக்கின் குறுக்கே நின்றதால் முழு வேகத்தில் வந்த அஜித்தின் கார் கட்டுபாட்டை இழந்து மோதியது. இதில் காரின் இடதுபுற முன்பகுதி உடைந்து சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த அஜித்குமாருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். again ajithkumar met accident in gt4 track… but
விபத்தைத் தொடர்ந்து காரில் இருந்து பத்திரமாக இறங்கிய அஜித், டிராக்கில் சிதறிக்கிடந்த கார் பாகங்களை அங்கிருந்த ஊழியர்களுடன் சேர்ந்து ஒன்றுசேர்த்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி கவனம் பெற்றுள்ளது. again ajithkumar met accident in gt4 track… but
