மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்… திட்டமிட்டபடி இன்று கார் பந்தயத்தில் பங்கேற்பாரா?

Published On:

| By christopher

again ajithkumar met accident at belgium... is he ok?

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் 10 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. again ajithkumar met accident at belgium… is he ok?

இந்த நிலையில் சமீபத்தில் படத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. அதில் கூட பங்கேற்காத அஜித், கடந்த சில வாரங்களாக பெல்ஜியத்தில் இன்று (ஏப்ரல் 19) நடைபெற உள்ள கார் பந்தயத்தில் பங்கேற்பதற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

ADVERTISEMENT

அதன்படி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது அஜித் குமார் ரேசிங் குழுவினருடன் பெல்ஜியம் சென்றார் நடிகர் அஜித், போட்டி நடைபெறும் ஸ்பா சர்க்கியூட்டில் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின.

ADVERTISEMENT

இந்த நிலையில் தான் போட்டிக்கு முந்தைய கார் ரேஸ் பயிற்சியின் போது நடிகர் அஜித்குமார் இன்று மீண்டும் விபத்தில் சிக்கியுள்ளார். அதிவேகத்தில் வந்த அவரது கார், வளைவில் திரும்ப முயன்றபோது நேராக தடுப்புச்சுவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. அதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது.

அதனைத் தொடர்ந்து அஜித் குமார் பாதுகாப்பாக இருப்பதாக அவரது அணியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

எனினும் காரில் இருந்து வெளியே வந்த அஜித், நடப்பதற்கு சிறிது சிரமப்படும் வீடியோ, போட்டியை காணச் சென்றிருந்த ரசிகர்கள் மூலம் வெளியாகின.

இதனையடுத்து திட்டமிட்டபடி அவர் இன்று போட்டியில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் பெல்ஜியம் ஸ்பா சர்கியூட்டில் இன்று நடைபெறும் ரேஸில் அஜித் குமார் பங்கேற்கிறார் என்றும், தொடர்ந்து 12 மணி நேரம் நடைபெறும் இந்த ரேஸில் அஜித் உட்பட 3 ஓட்டுநர்கள் மாறி மாறி காரை இயக்கவுள்ளனர் என அஜித்குமார் ரேசிங் அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share