ADVERTISEMENT

கரூர் துயரத்துக்கு பின் முதல் நிகழ்ச்சி.. காஞ்சிபுரத்தில் நாளை விஜய் ‘சந்திப்பு’!

Published On:

| By Mathi

TVK Vijay Kanchipuram

கரூரில் 41 பேர் பலியானதற்கு பிறகு தவெக தலைவர் நடிகர் விஜய் முதல் முறையாக நாளை நவம்பர் 23-ந் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் ஜேப்பியார் கல்லூரியில் 5 நாட்களாக தவெக தொண்டரணியினர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் இந்த பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.

ADVERTISEMENT

இப்பயிற்சியை பெறும் தொண்டரணியினருடன் விஜய் ஆலோசனை நடத்துகிறார். இதனைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களையும் சந்தித்து விஜய் குறைகளைக் கேட்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்காக சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளரிடம் தவெகவின் திருப்பெரும்புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் எஸ். கார்த்திக், பாதுகாப்பு கோரி கொடுத்த கடிதம்: வரும் 23-ந் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவரச்சத்திரத்தில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், காஞ்சிபுரம் மாவட்ட மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சிக்கு அம்மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 2,000 பேர் மட்டுமே
இந்த உள்ளரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சிக்கு, அனுமதிக்கப்பட்டவர்களைத் தவிர வேறு யாருக்கும் உள்ளே வரவும், நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் அனுமதி இல்லை. எனவே இந்த நிகழ்ச்சிக்குத் தேவையான பாதுகாப்புகளை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share