14 மாதங்களுக்கு பிறகு…. கடற்கரை – வேளச்சேரி ரயில் சேவை இயக்கம்!

Published On:

| By Selvam

பராமரிப்பு பணிகள் காரணமாக  கடந்த 14 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் சேவை நாளை (அக்டோபர் 29) முதல் வழக்கம் போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே இன்று (அக்டோபர் 28) அறிவித்துள்ளது.

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.  லட்சக்கணக்கான மக்கள் தினமும் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வந்தனர்.  இந்தநிலையில், சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூருக்கு நான்காவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

இதன்காரணமாக, கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வேளச்சேரி – சிந்தாதரிப்பேட்டை வரை மட்டுமே பறக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. கோட்டை, பார்க், கடற்கரை வழித்தடங்களில் ரயில் சேவை இயக்கப்படவில்லை.

இந்தநிலையில், பராமரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதால், 14 மாதங்களுக்கு பிறகு மீண்டும் வழக்கம் போல்  கடற்கரை – வேளச்சேரி  இடையே பறக்கும் ரயில் சேவை நாளை முதல் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது. இதனால், ரயில் சேவையை பயன்படுத்தும் பொதுமக்கள் மகிழ்சியடைந்துள்ளனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

’நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா..?’ – நயன்தாரா விளக்கம்

கோவை: தொழிலதிபர்கள் வீடுகளில் ஐடி ரெய்டு… 42 கோடி பறிமுதல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share