‘போர்ன்விட்டா’வைத் தொடர்ந்து ஆரோக்கிய பானம் அடையாளத்தை இழக்கும் ‘ஹார்லிக்ஸ்’!

Published On:

| By christopher

Horlicks losing its health drink identity

இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் ஹார்லிக்ஸ், பூஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பானங்களை தயாரித்து வருகிறது. ஆரோக்கிய பானம் என்ற அடையாளத்தின் கீழ் அழைக்கப்பட்ட ஹார்லிக்ஸ் தற்போது அந்த அடையாளத்தை இழக்கிறது.

இதன்படி ஆரோக்கிய பானம் என்பதிலிருந்து ‘செயல்பாட்டு ஊட்டச்சத்து பானங்கள்’ என்ற வகைமைக்கு பெயர் மாறுகிறது.

ADVERTISEMENT

முன்னதாக ‘ஆரோக்கியமான பானங்கள்’ பிரிவில் இருந்து குறிப்பிட்டவற்றை நீக்குமாறு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், இ-காமர்ஸ் தளங்களை கேட்டுக் கொண்டது.

அதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ரித்தேஷ் திவாரி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ADVERTISEMENT

முன்னதாக போர்ன்விடா பானத்தில் அதிக சர்க்கரை அளவு இருப்பது குறித்து கவலைகள் எழுந்ததை அடுத்து, அது ஆரோக்கிய பானம் என்ற அடையாளத்தை இழந்தது.

‘ஃபுட் பார்மர்’ என்ற பெயரிலான இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் இதற்கான சர்ச்சையை முதலில் கிளப்பினார். போர்ன்விட்டா ஓர் ஆரோக்கிய பானமே அல்ல என்றும், அதில் அதிகளவு சர்க்கரை உள்ளதால் அவற்றை அருந்தும் குழந்தைகளுக்கு மிகைபருமன் முதல் டைப் 2 நீரிழிவு வரை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பாகும் என்று எச்சரித்தார்.

ADVERTISEMENT

இதைக் கடுமையாக மறுத்த போர்ன்விட்டா நிறுவனம், இன்ஸ்டாகிராம் பிரபலத்துக்கு எதிராக சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அறிவித்தது.

இதையடுத்து, பொதுவெளியில் மன்னிப்பு கோருவதாக அறிவித்த ‘ஃபுட் ஃபார்மர்’ தனது வீடியோவை நீக்குவதாகவும் தெரிவித்தார். ஆனால் அவர் உருவாக்கிய பொறி பெரு நெருப்பாக வளர்ந்தது.

கடைசியில் போர்ன்விட்டாவை ஆரோக்கிய பானங்கள் என்ற வகையிலிருந்து நீக்குமாறு, இ-காமர்ஸ் தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து, போர்ன்விட்டாவும் அதிகாரபூர்வமான ஆரோக்கியபானம் என்ற அடையாளத்தை துறந்தது.

இந்த வரிசையில் தற்போது ஹார்லிக்ஸும் இணைந்திருக்கிறது. இந்த நிலையில் மேலும் பல ஆரோக்கிய பானங்கள் விரைவில் இந்த வரிசையில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: பப்பட் ரோல்

கடைசியில மண்டை மேல இருக்குற கொண்டைய மறந்துட்டேனே: அப்டேட் குமாரு

கடைசி பஸ்ஸை மிஸ் செய்ததால் கிடைத்த கதை… யார் இந்த ‘பசி’ துரை

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share