இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தலைமையிலான அரசாங்கத்தில் முக்கிய கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் ஷாஸ் (Ultra-Orthodox Shas) கட்சி நேற்று (ஜூலை 16) அமைச்சரவையிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. after alliance leaving nethanyahu govt get trouble
ஷாஸ் கட்சி வெளியிட்ட அறிக்கையில், “தங்களின் நாட்டின் மாணவர்களின் எதிர்காலத்தில் இராணுவ சேவையிலிருந்து விலக்குப் பெறுவதற்கான உறுதிகளை சட்டமாக்க தற்போதைய இஸ்ரேல் அரசு தயாராக இல்லை, ஆகையால் இனி இந்த அரசில் தொடர முடியாத நிலைக்கு வந்துள்ளோம்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வருடங்களாக இஸ்ரேல் போர் சூழலை சந்தித்து வரும் நிலையில் ராணுவ வீரர்களின் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால் அந்நாட்டில் உள்ள இளைஞர்களை கட்டாய ராணுவ சேவைக்கு இஸ்ரேல் அரசு நிர்பந்தித்துள்ளது.
இதில் மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூட்டணி கட்சிகளும் எதிர்கட்சிகளும் வலியுறுத்தி வந்த நிலையில் அதை பெஞ்சமின் நெதன்யாகு அரசு நிராகரித்துள்ளது. இதன் காரணமாகவே கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறி வருகின்றன.
தற்போதைய இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் மொத்தமாக 120 இடங்கள் உள்ளது. இதில் பெஞ்சமின் நெதன்யாகுவின் தேசிய தாராளவாத கட்சிக்கு 32 தொகுதிகளும், கூட்டணி கட்சிகளுக்கு 28 தொகுதிகளும் உள்ளன.
இந்த கூட்டணியில் இரண்டாவது அதிக பாராளுமன்ற உறுப்பினர்கள் (11) கொண்ட கட்சியாக அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் ஷாஸ் கட்சி உள்ளது. தற்பொழுது இந்தக் கட்சி வெளியேறுவதால் நெதன்யாகு தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை குறைந்து தற்பொழுது மைனாரட்டி அரசாங்கமாக கருதப்படுகிறது.
கடந்த வாரம் தான் 7 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட யுனைடெட் டோரா ஜூடாசிம் (UTJ) கட்சி அதே காரணத்திற்காகவே நெதன்யாகு அரசை விட்டு விலகியது குறிப்பிடத்தக்கது.
இனி என்ன நடக்கும்?
இந்நிலையில், ஜூலை 27ஆம் தேதியுடன் இஸ்ரேல் நாடாளுமன்றம் மூன்று மாத விடுமுறைக்குச் செல்வதால், அடுத்த சில மாதங்கள் முக்கியமான சட்ட நடவடிக்கைகள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. இதனால் நெதன்யாகுவுக்கு, இந்த கட்சிகளை மீண்டும் இணைக்க சில கால அவகாசம் கிடைக்கலாம் என்று நம்பப்படுகிறது.
