1971-க்கு பிறகு போர்க்கால ஒத்திகை… உள்துறை செயலாளர் முக்கிய ஆலோசனை!

Published On:

| By Selvam

Nationwide Civil Defence Mock

நாடு முழுவதும் நாளை (மே 7) போர்க்கால பயிற்சி ஒத்திகை நடைபெற உள்ள நிலையில், மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் இன்று (மே 6) அனைத்து மாநில உள்துறை செயலாளர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். Nationwide Civil Defence Mock

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி காஷ்மீர் பகல்ஹாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து எல்லையில் போர்ப்பதற்றம் நீடிக்கிறது.

ADVERTISEMENT

இந்தநிலையில், அனைத்து மாநிலங்களிலும் நாளை (மே 7) 244 இடங்களில் போர்க்கால ஒத்திகை பயிற்சி நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, போர்க்கால பயிற்சின்போது வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை, சைரன்களை இயக்குதல், தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக இருக்க பொதுமக்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் பதுங்கு குழிகள் மற்றும் அகழிகளை சுத்தம் செய்தல் ஆகியவை அடங்கும்.

ADVERTISEMENT

இந்தநிலையில், போர்க்கால பயிற்சி ஒத்திகை தொடர்பாக அனைத்து மாநில உள்துறை செயலாளர்கள் மற்றும் சிவில் பாதுகாப்புத் தலைவர்களுடன் உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் இன்று காணொலி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதில் தமிழக உள்துறை செயலாளர் தீரஜ் குமார் கலந்து கொண்டார்.

கடைசியாக 1971-ஆம் ஆண்டு வங்காளதேச விடுதலைப் போரின் போது, இதுபோன்று நாடு தழுவிய அளவில் போர் பயிற்சி ஒத்திகை நடத்தப்பட்டது. 54 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் போர் பயிற்சி ஒத்திகை நடப்பது உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை கிளப்பியுள்ளது. Nationwide Civil Defence Mock

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share